கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற தொண்டரின் செல்போனை தட்டிவிட்டதுடன் டென்ஷனாகி அவரை திட்டித்தீர்த்தார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். நெருக்கடியான நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆபத்பாந்தவனாக திகழ்ந்தவர். குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிரதான கட்சியாக பாஜக உருவெடுத்த போதிலும், குறைந்த இடங்களில் வெற்றி பெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி ஏற்படுத்தி காங்கிரஸை ஆட்சியில் அமர வைத்தார். இருப்பினும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் கட்சி தாவியதால் இக்கூட்டணி ஆட்சி அதிகாரத்தை பறிகொடுத்தது. இருப்பினும் சிவக்குமாருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு தினமான நேற்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கட்சி நிகழ்ச்சி, ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாண்டியா மாவட்டம் சிவபுரி என்ற பகுதிக்கு வந்திருந்தார். அப்போது நடந்து சென்று கொண்டிருந்த டி.கே.சிவக்குமாரை நெருங்கி வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கையில் மொபைல் போனுடன் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
காங்கிரஸ் தொண்டரின் செல்போனை தட்டிவிட்டதுடன், உங்களுக்கெல்லாம் அறிவு கிடையாதா என தொண்டரை பார்த்து சிவக்குமார் திட்டியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தனது செயலை நியாயப்படுத்தி சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
Also read:
காங்கிரஸ் கொடியேற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
“அனுமதியில்லாமல் செல்பி எடுக்க முயல்வது பாதுகாப்பு மீறல் தான். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எப்படி தற்கொலைப் படையினர் மூலம் படுகொலை செய்யப்பட்டார் என்பதை மறக்கக் கூடாது, அரசியல்வாதிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். நான் செய்ததில் தவறேதும் கிடையாது. நானும் ஒரு சாதாரண மனிதன் தான். எனக்கும் உணர்வுகள் உண்டு, கோவம் வரும். ராஜீவ்காந்திக்கு நடந்தது போல எனக்கும் நடந்தால் என்ன செய்வது?” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Also read:
மேடையில் நாற்காலிக்காக சண்டை போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ
டி.கே.சிவக்குமார் இது போல பொது இடத்தில் தொண்டரிடம் கடுமையாக நடந்து கொள்வது இது முதல் முறை நடக்கும் சம்பவம் கிடையாது. சில மாதங்களுக்கு முன்னர் செல்பி எடுக்க முயன்ற தொண்டரின் கன்னத்தில் அவர் அறைந்தார். அதன் பின்னர் அறை வாங்கியவர் தனக்கு நெருங்கிய உறவினர் என அவர் விளக்கம் அளித்தது நினைவுகூறத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.