பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஜி.வி.ஹர்ஷா குமார் ஒட்டகத்தில் சவாரி செய்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், அதிக லாபம் ஈட்டுவதற்காக, குறைந்த அளவிலான எரிபொருளை எண்ணெய் வளமிக்க நாடுகள் உற்பத்தி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகள் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தார். கொரோனாவால் ஏற்பட்டுள்ள வரிவிதிப்பும் விலையேற்றத்திற்கு மற்றொரு காரணம் என்று கூறிய பிரதான், வரி வருவாய் மூலம் நிதி திரட்ட வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.
#WATCH Andhra Pradesh: Congress leader and former MP, GV Harsha Kumar rides a camel from his residence to Rajiv Gandhi Educational Institute in Rajahmundry, as a mark of protest against the fuel price hike. (22.02.2021) pic.twitter.com/bBYn6vjfFO
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆந்திரா காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஜி.வி.ஹர்ஷா குமார் தனது இல்லத்திலிருந்து ஆந்திராவின் ராஜமுந்திரியில் உள்ள ராஜீவ் காந்தி கல்வி நிறுவனத்திற்கு ஒட்டகத்தில் சவாரி செய்துள்ளார்.