Home /News /national /

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு மீண்டும் நெருக்கடி

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு மீண்டும் நெருக்கடி

காங்கிரஸ் தலைவர்கள் டி.கே. சிவகுமார், தினேஷ் குண்டு ராவ், ஜி பரமேஸ்வரா, சித்தராமையா ஆகியோர் பெங்களூரில் முதல்வர் எச்.டி. குமாரசாமியுடன் ஆலோசனை

காங்கிரஸ் தலைவர்கள் டி.கே. சிவகுமார், தினேஷ் குண்டு ராவ், ஜி பரமேஸ்வரா, சித்தராமையா ஆகியோர் பெங்களூரில் முதல்வர் எச்.டி. குமாரசாமியுடன் ஆலோசனை

  • News18
  • Last Updated :
    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், முதலமைச்சர் குமாரசாமியும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும் அவசர ஆலோசனை நடத்தினர்.

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக குமாரசாமி கடந்த மே மாதம் பொறுப்பேற்றார். இந்த ஆட்சி அமைந்து சுமார் 4 மாதங்களே ஆகின்றன. இந்த நிலையில் கர்நாடகா அரசியலில் பலவிதமான பிரச்சனைகள் எழுந்துள்ளன.

    அதன் முக்கிய காரணமாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதரர்களான ரமேஷ் ஜார்கிஹொளி, சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் இருந்து வருகின்றனர். தங்களுக்கு முக்கிய அமைச்சர் பதவியும் தங்களது ஆதரவாளர்களுக்கு வாரியத் தலைவர் பதவியும் வழங்க வேண்டும் என அவர்கள் முதல்வர் குமாரசாமிக்கு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    மேலும் அவர்களது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 22 பேர், மகாராஷ்டிராவில் முகாமிட்டு கர்நாடக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதலமைச்சர் குமாரசாமி இறங்கியுள்ளார். நேற்று பெங்களுர்வில்  காங்கிரஸ் தலைவர்கள் டி.கே. சிவகுமார், தினேஷ் குண்டு ராவ், ஜி பரமேஸ்வரா, சித்தராமையா ஆகியோருடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: BJP, Congress, HD Kumaraswamy Siddaramaiah, JD(S), Karnataka

    அடுத்த செய்தி