உ.பியில் காங்கிரசுக்கு வெற்றி உறுதி: ராகுல் காந்தி

பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி என்பது அரசியல்ரீதியான முடிவு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Web Desk | news18
Updated: January 13, 2019, 8:21 AM IST
உ.பியில் காங்கிரசுக்கு வெற்றி உறுதி: ராகுல் காந்தி
துபாயில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: January 13, 2019, 8:21 AM IST
உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதியும் கைவிட்ட நிலையில், அங்கு மக்களவை தேர்தலில் முழு உத்வேகத்துடன் களமிறங்கப் போவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டணிஅமைத்து தலா 38 இடங்களில் போட்டியிடப் போவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் அங்கு தனித்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைப்பது என்று எடுத்துள்ள முடிவை தான் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.

அகிலேஷ்- மாயாவதி கூட்டணி


அதேநேரம், உத்தரப்பிரதேசத்திற்கு காங்கிரஸ் மகத்தான சேவை அளிக்க வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். அதனால் கட்சியை வலுப்படுத்தி முழுவேகத்துடன் மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைப்புகளின் எதிர்ப்பை ஆர்எஸ்எஸ் சம்பாதித்துள்ளது என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார். அதனால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Also see... பிரச்னைக்கு தீர்வு கிடைத்த பிறகே மேகதாது அணை கட்ட அனுமதி: மத்திய அரசு
First published: January 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...