Home /News /national /

கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும்; கட்சி அவ்வளவுதான் - மூத்த தலைவர் திடீர் ராஜினாமா

கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும்; கட்சி அவ்வளவுதான் - மூத்த தலைவர் திடீர் ராஜினாமா

Congress

Congress

தேவகவுடா போன்ற தலைவரை விட்டு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து சித்தராமையாவுக்காக விலகினேன். ஆனால் எனக்கு என்ன கைமாறு செய்திருக்கிறார் பார்த்தீர்களா?.

    முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சி.எம்.இப்ராஹிம், காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததோடு, கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும் என அக்கட்சியையும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவையும் கடுமையாக சாடியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் இருந்து வரும் மாநிலங்களுள் ஒன்றான கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. எதிர்கட்சித் தலைவராக சி.ஆர்.பாட்டில் கடந்த மாதம் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அந்தப் பதவி சித்தராமையாவுக்கு நெருங்கியவரும், கட்சியில் சீனியருமான சி.எம்.இப்ராஹிமுக்கு அளிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவரைவிட ஜூனியரான பி.கே.ஹரிபிரசாத்துக்கு அப்பதவி அளிக்கப்பட்டது.

    இதனால் ஏமாற்றமும், தலைமை மீது அதிருப்தியும் அடைந்த சி.பி.இப்ராஹிம் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

    Also read:  பிஸ்கெட்களை தரையில் வீசி இளைஞரை உதைத்து சாப்பிட வைத்த கும்பல் - பகீர் காரணம்!!

    எனக்குள் இருந்த நெருக்கடியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போக்கி, என்னை சுதந்திரமாக முடிவெடுக்க வைத்துள்ளார் என்பதால் நான் மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். நலம்விரும்புகள், ஆதரவாளர்களுடன் கலந்துபேசி, தனது அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என அவர் தெரிவித்திருக்கிறார்.



    இதனிடையே செய்தியாளர்களிடையே இம்ராஹிம் பேசுகையில், காங்கிரஸ் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது. பணமில்லாமல் யாராலும் காங்கிரஸில் பணியாற்ற முடியாது. இந்திரா காந்தி, நேரு போன்றோரின் காலகட்டத்தில் காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது பணம் பறிக்கும் கட்சியாக மாறியுள்ளது, கார்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் விரைவில் வீழ்த்தப்படும். காங்கிரஸ் கட்சி மூழ்கிவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் இனி முடிந்து போன ஒன்று” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பி.கே.ஹரிபிரசாத் ஒரு ஜூனியர். அவரின் கீழ் என்னால் எப்படி பணியாற்ற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தேவகவுடா போன்ற தலைவரை விட்டு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து சித்தராமையாவுக்காக விலகினேன். ஆனால் எனக்கு என்ன கைமாறு செய்திருக்கிறார் பார்த்தீர்களா?. மாநில மக்களும், என் நலம்விரும்பிகளும், காங்கிரஸுக்கு தகுந்த பதிலளிப்பார்கள் என இம்ராஹிம் கூறினார்.

    Also read:  2022ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் அமெரிக்கர் - குற்றமும்.. பின்னணியும்..

    1996ல் பிரதமர் தேவகவுடாவின் அமைச்சரவையில் மத்திய சுற்றுலா, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த இம்ராஹிம், 2008ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இப்போதும் அக்கட்சியின் குமாரசாமியுடன் தொடர்பில் அவர் இருந்து வருகிறார். எனவே மீண்டும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இப்ராஹிம் இணைவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Congress

    அடுத்த செய்தி