10 ஆண்டுகளாக பாஜகவின் வசம் இருந்த ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

news18
Updated: June 13, 2018, 12:22 PM IST
10 ஆண்டுகளாக பாஜகவின் வசம் இருந்த ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா
news18
Updated: June 13, 2018, 12:22 PM IST
கர்நாடக மாநிலத்தில் ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். 

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பெறாத நிலையில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தன.

தேர்தலுக்கு முன்னதாக கடந்த மே மாதம் 4ம் தேதி பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட விஜயகுமார் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் ஜெயநகர் தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பாஜக சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற ஜெயநகர் தேர்தலில்  55 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை மொத்தம் 14 சுற்றுகளாக நடைபெற்றது. இதன் முடிவில் மொத்தம் 54,045 வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் பிரகலாத்தை விட 3,775 வாக்குகள் வித்தியாசத்தில் சவுமியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் வசம் இருந்த ஜெயநகர் தொகுதி தற்போது காங்கிரசுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Congratulations to our candidate @Sowmyareddyr for winning the #Jayanagar Assembly election.

With this victory, @INCKarnataka has MLAs in 15 out of the 28 Assembly seats of Bengaluru. pic.twitter.com/TrJelqWfdE
Loading...
— Karnataka Congress (@INCKarnataka) June 13, 2018
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...