கிராம மக்களின் வாக்குகளை பெற தன்னை விமர்சிப்பதை காங்கிரஸ் நிறுத்திவிட்டதாகவும் பாஜகவினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று வருகிறார், 3-வது நாளான இன்று ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கண்டோர்னாவில் பிரமாண்ட பேரணியை தொடங்கிவைத்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, ஊழலுக்கு எதிராக அரசு செயல்பட்டால், அரசுக்கு எதிராக சிலர் கூச்சலிடுவதாக கூறினார்.
மேலும், ‘கடந்த 20 ஆண்டுகளில், குஜராத்தை எதிர்த்து நின்றவர்கள், மாநிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த எந்த கல்லையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் எனக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்தார்கள் என குறிப்பிட்ட மோடி, காங்கிரஸ் தன்னை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு கிராம மக்களின் வாக்குகளை பெற பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார். இதனால் பாஜகவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் அனைத்து பதவிகளும் விற்கப்படுகின்றன.. ராகுல்காந்தி விமர்சனம்..!
சர்தார் வல்லபபாய் பட்டேலை கௌரவப்படுத்தும் விதமாக குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமையின் சிலையை எப்போதாவது காங்கிரஸ் கட்சியினர் பார்வையிட்டுள்ளனரா என்று வாக்காளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறிய மோடி, மண்ணின் மகன் சர்தார் பட்டேலை மதிக்காதவர்களுக்கு குஜராத்தில் இடமில்லை’ என்று பேசினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat, Modi, Narendra Modi