காங்கிரஸ் கட்சியினருக்கு சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயரை சொல்ல கூட உரிமையில்லை என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் ஒன்று மற்றும் ஐந்தாம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் நியூஸ்18 குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் குழு தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷியுடன் “குஜராத் ஆதிவேஷன்” என்ற கலந்துரையாடல் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஒரு வருடத்தில் 250 நாட்களுக்கு ஊரடங்கு இருந்ததாக குற்றச்சாட்டினார்.
மேலும், கொரோனா காலத்தில் மக்களுக்கு மின்சாரமும், உணவு தானியங்களும் வழங்கியது இலவச பொருட்கள் கிடையாது. அது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற என தெரிவித்தார். “ஒருவருக்கு வீடு கொடுப்பதும், கேஸ் இணைப்பு கொடுப்பதும், கொரோனா காலத்தில் மின்சாரம், உணவு பொருட்கள் கொடுப்பது எல்லாம் இலவசங்கள் கிடையாது. இதுவெல்லாம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கொடுக்கும் பொருட்கள்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஒரு வருடத்தில் 250 நாட்களுக்கு ஊரடங்கு இருந்தது. ஆனால் இப்போது நீங்கள் ஒரு 20 வயது இளைஞனிடம் ஊரடங்கு பற்றி கேட்டால், அவருக்கு அப்படி என்றால் என்னவென்றே தெரியாது. ஏனென்றால் அவன் அதை பார்த்ததே இல்லை” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சோனியாகாந்தி - மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில், 12 லட்சம் கோடி ஊழலை நாடு கண்டது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழலை எண்ணுவது கடினமாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது” என தெரிவித்தார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amit Shah, Amit Shah To News 18, Gujarat, News 18