Home /News /national /

மாயாவதிக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முன்வந்தோம்: ராகுல் காந்தி

மாயாவதிக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முன்வந்தோம்: ராகுல் காந்தி

மாயாவதி- காங்கிரஸ்

மாயாவதி- காங்கிரஸ்

அம்பேத்கர் மற்றும் காந்தி காட்டிய வழியில் தலித்துகள் தங்கள் உரிமைக்காக போராட வேண்டும் எனவும் ராகுல் காந்தி கூறினார்.

    நடந்து முடிந்த உத்தரப் பிரதேச தேர்தலில் மாயாவதியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க முன்வந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

    ஐஏஎஸ் அலுவலர் ஏகே ராஜு தொகுத்த 'தி தலித் ட்ரூத்' (The Dalit Truth) என்ற புத்தகத்தை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஜவஹர் பவனில் வெளியிட்டார்.

    புத்தகத்தை வெளியிட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, அன்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேச தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து எதிர்கொள்ள விரும்பியதாகவும் அதற்காக மாயாவதிக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த விரும்பியதாகவும் கூறினார்.

    ஆனால், தங்களிடம் பேச கூட மாயாவதி தயாராக இல்லை. சிபிஐ, அமலாக்கத்துறை, பெசாகஸ் போன்றவற்றுக்கு பயந்து பாஜக எளிமையாக வெற்றிபெற மாயாவதி வழிவிட்டுவிட்டார் என ராகுல் குற்றஞ்சாட்டினார்.

    இதையும் படிங்க: Citizenship Amendment Act: குடியுரிமை (திருத்த) சட்டத்துக்கான விதிகளை இறுதி செய்ய அவகாசம் கேட்கும் மத்திய அரசு


    பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்ஷி ராம் மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகக் கூறிய ராகுல், உத்தரப் பிரதேச தலித் மக்களின் உரிமைக்குரலாக கன்ஷி ராம் இருந்ததாக புகழாரம் சூட்டினார்.

    நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பலவீனமாக்கப்பட்டு அமைப்புகள் பலமிழந்து வருகின்றன, இதுவே இன்றைய இந்தியாவின் யதார்த்த சூழல் எனப் பேசிய ராகுல், இதன் காரணமாக தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடிகள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகியோர் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள் என கவலை தெரிவித்தார்.

    மேலும் படிக்க: உத்தரப்பிரதேச சிறைகளில் இனி காயத்ரி மந்திரம் ஒலிக்கும்... யோகி அரசு அறிவிப்பு


    அம்பேத்கர் மற்றும் காந்தி காட்டிய வழியில் தலித்துகள் தங்கள் உரிமைக்காக போராட வேண்டும் எனவும் ராகுல் காந்தி கூறினார்.

    நடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தங்களுக்கு கூட்டணி வைக்கவில்லை.

    இதையடுத்து தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கடும் வீழ்ச்சியைக் கண்டன. மொத்தமுள்ள 403 இடங்களில் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி 2.5 சதவீதத்துக்கும் கீழ் சென்றது. போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் 97 சதவீதத்தினர் தங்கள் டெபாசிட் தொகை இழந்தனர்.

    இதை படிக்க: ராணுவத்தின் புதிய நியமன கொள்கை.. 50% சதவீத ராணுவ வீரர்கள் 5 ஆண்டுகளில் ஓய்வுபெறக் கூடும்


    அதேபோல், ஒரே ஒரு இடத்தை மட்டுமே வென்ற பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குவங்கி 13 சதவீதமாக சரிந்தது. சுமார் 72 சதவீத பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட் தொகையை இழந்தனர்.இதன் காரணமாக நீண்ட வருடங்களாக நான்கு முணைப் போட்டியாக இருந்த உத்தரப் பிரதேச மாநில அரசியல் பாஜக, சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே இரு முணை போட்டியாக மாறியுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Mayawathi, Rahul gandhi, Uttar pradesh

    அடுத்த செய்தி