ஹோம் /நியூஸ் /இந்தியா /

நான் கார்ப்ரேட்டுகளுக்கு எதிரானவன் அல்ல.. அதானிக்கு ஆதரவாக பேசிய ராகுல்காந்தி!

நான் கார்ப்ரேட்டுகளுக்கு எதிரானவன் அல்ல.. அதானிக்கு ஆதரவாக பேசிய ராகுல்காந்தி!

கவுதம் அதானி குறித்து ராகுல் காந்தி

கவுதம் அதானி குறித்து ராகுல் காந்தி

ரூ.60,000 கோடி முதலீட்டை எந்த முதலமைச்சர்களும் மறுக்க மாட்டார்கள் என கவுதம் அதானி குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Karnataka, India

  ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தொழிலதிபர் கவுதம் அதானி சில நாள்களுக்கு முன்னர் மாபெரும் தொழில் முதலீட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற கவுதம் அதானி, ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.65,000 கோடிக்கு அதானி குழுமம் முதலீடு செய்வதாக அறிவித்தார்.

  10,000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி மையம், சிமென்ட் ஆலை, ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம் மேம்பாட்டு திட்டம் என பல்வேறு திட்டங்களை அதானி குழுமம் செய்யவுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்களும், குறிப்பாக ராகுல் காந்தியும் அதானி பெயர் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். அதானி போன்ற பெரும் பணக்காரர்களை பாஜக வளர்த்து விடுகிறது. அவர்களுக்கு முன்னணி முதலீட்டு திட்டங்கள் செல்கின்றன என ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேசி வரும் நிலையில், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதானி ரூ.65,000 திட்டத்தை முதலமைச்சர் தலைமையிலான விழாவில் அறிவித்துள்ளது பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது.

  இது பெரும் விமர்சனத்தை கொண்டுவந்த நிலையில், "அதானி, அம்பானி, ஜெய் ஷா என யார் முதலீடு செய்தாலும் ராஜஸ்தான் அரசு வரவேற்கும் மாநிலத்திற்கு முதலீடு வந்தால் போதும்" என முதலமைச்சர் அசோக் கெலாட் ஒரே போடாகப் போட்டார்.

  இந்நிலையில், அதானியின் முதலீடு குறித்து ராகுல் காந்தியும் தனது விளக்கத்தை அளித்துள்ளார். கர்நாடகாவில் அவர் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ள நிலையில், அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அவர் ராகுல் காந்தி கூறியதாவது, "ராஜஸ்தானுக்காக ரூ.60,000 கோடி வழங்கவுள்ளார் அதானி. இது போன்ற வாய்ப்பை எந்த முதலமைச்சரும் நழுவ விட மாட்டார்கள். அவ்வாறு நழுவ விட்டால் தான் தவறு. எனது விமர்சனமே அரசியல் அதிகாரத்தை வைத்து நாட்டின் வணிகத்தை நிர்ணயம் செய்வதற்கு எதிராகத் தான். நான் கார்ப்ரேட்டுகளுக்கு எதிரானவே அல்ல. ஆனால், ஒரு சிலர் கட்டுப்பாட்டில் நாட்டின் மொத்த வணிகமும் செல்வதைத்தான் எதிர்க்கிறேன்" என்றார்.

  இதையும் படிங்க: தினம் தினம் பிரச்னை! நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரயில்! அவதிக்குள்ளான பயணிகள்!

  காங்கிரஸ் தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் தான் ஆட்சியில் உள்ளது.ராஜஸ்தானிலும் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதலமைச்சர் கெலாட் முதலீடு வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Adani, Rahul gandhi, Rajasthan