முகப்பு /செய்தி /இந்தியா / “காங்கிரஸ் கட்சி பலவீனமடைவதை நாங்கள் காண்கிறோம்” - போட்டு உடைத்த காங் மூத்த தலைவர் கபில் சிபல்

“காங்கிரஸ் கட்சி பலவீனமடைவதை நாங்கள் காண்கிறோம்” - போட்டு உடைத்த காங் மூத்த தலைவர் கபில் சிபல்

கபில் சிபல்

கபில் சிபல்

குலாம் நபி ஆசாத்தின் அரசியல் அனுபவத்தை கட்சி பயன்படுத்தாமல் போனது ஏமாற்றமே. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும் கள எதார்தம் என்ன என்பதை அவர் அறிவார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்தார். காஷ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு பேசினார்.

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பணிக்காலம் நிறைவு ஆனதை அடுத்து சொந்த ஊரான காஷ்மீருக்கு ஒராண்டுக்குப் பின்னர் திரும்பியிருக்கிறார். அவருக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் அவரை வாழ்த்தும் விதமாகவும் காஷ்மீரில் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு சக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என்பதை எடுத்துரைத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு மூத்த தலைவர்கள் 23 பேர் இணைந்து கடிதம் எழுதியிருந்தனர். இது அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கபில் சிபல், ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட அந்த 23 பேரும் G-23 என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறார்கள்.

அரசியலில் நெடிய அனுபவம் கொண்டவரான குலாம் நபி ஆசாத்தை மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவராக தொடர அனுமதிக்காமல் அவருக்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கேவை புதிய மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் ஆக்கியது காங்கிரஸ். இது G-23 தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து காங்கிரஸ் தலைமைக்கு தங்களின் எதிர்ப்புக் குரலை காஷ்மீர் பொதுக்கூட்டத்தில் பதிய வைத்துள்ளனர் மூத்த தலைவர்கள்.

சமீபத்தில் ராகுலின் பேச்சால் அதிருப்தியடைந்த கபில் சிபல் பேசுகையில், “உண்மை என்னவெனில் காங்கிரஸ் கட்சி பலவீனமடைவதை நாங்கள் காண்கிறோம். அதற்காகத் தான் இங்கே நாங்கள் கூடியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.”

குலாம் நபி ஆசாத்தின் அரசியல் அனுபவத்தை கட்சி பயன்படுத்தாமல் போனது ஏமாற்றமே. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும் கள எதார்தம் என்ன என்பதை அவர் அறிவார். பாராளுமன்றத்தில் அவரை தொடர விடாதது சோகத்தை ஏற்படுத்தியது. ஏன் காங்கிரஸ் இவ்வாறு செய்தது என தான் புரியவில்லை” என கூறினார்.

உத்தரப் பிரதேச முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவரான ராஜ் பாபர் உள்ளிட்ட பிற தலைவர்களும் தங்களின் கருத்துக்களை முன் வைத்தனர்.

First published:

Tags: Congress, Kashmir