கருத்துக்கணிப்புகளை கண்டு கலங்க வேண்டாம்: தொண்டர்களுக்கு பிரியங்கா வேண்டுகோள்!

உங்கள் உறுதியை குலைப்பதற்காகவே இத்தகைய வேலைகள் செய்யப்படுவதாகவும், இவற்றிற்கு மத்தியில் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

news18
Updated: May 21, 2019, 5:25 PM IST
கருத்துக்கணிப்புகளை கண்டு கலங்க வேண்டாம்: தொண்டர்களுக்கு பிரியங்கா வேண்டுகோள்!
பிரியங்கா காந்தி
news18
Updated: May 21, 2019, 5:25 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளைக் கண்டு தொண்டர்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளன.

இந்தத் தகவல் காங்கிரஸ் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசும் ஆடியோ ஒன்று, காங்கிரஸ் தொண்டர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதில் வதந்திகளும், கருத்துக்கணிப்புகளும் உங்களை சோர்வடையச் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் உறுதியை குலைப்பதற்காகவே இத்தகைய வேலைகள் செய்யப்படுவதாகவும், இவற்றிற்கு மத்தியில் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களையும், எந்திரங்களையும் கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும், கூட்டு முயற்சிக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: May 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...