முகப்பு /செய்தி /இந்தியா / காங்கிரஸ் கொடியேற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

காங்கிரஸ் கொடியேற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

சோனியா காந்தி

சோனியா காந்தி

கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கட்சிக் கொடி ஏற்றமுடியாமல் போனது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

  • Last Updated :

காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றிய போது, திடீரென கொடி கீழே விழுந்ததை பார்த்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அதிர்ச்சியடைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், இடைக்கால காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியின் கரங்களால் அக்கட்சியின் கொடியை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்களும், தொண்டர்களும் தலைமையகத்தில் நடைபெறும் கொடி ஏற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அங்குள்ள கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்ற முற்பட்ட போது திடீரென அக்கொடி கீழே விழுந்தது. அக்கொடி சோனியாவின் கைகளில் வந்து விழுந்தது. இதனை பார்த்த சோனியா காந்தியும் பிற காங்கிரஸ் தலைவர்களும் திகைத்து நின்றார்.

WATCH - Congress flag falls as Sonia Gandhi tries to unfurl it on party's 137th Foundation Day | India News | Zee News

சுமார் 20 நிமிடங்கள் அக்கொடியை மீண்டும் கொடிக்கம்பத்தில் ஏற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அது சாத்தியமாகாததால் அங்கிருந்தவர்கள் மாற்று யோசனை முன்வைத்தனர். அதன்படி, காங்கிரஸ் கட்சிக் கொடியை சோனியா காந்தியும், பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் மற்றும் பொருளாளர் பவன் பன்சால் ஆகியோர் தங்களின் கைகளில் ஏந்திப் பிடித்தனர். இதைப்பார்த்த தொண்டர்கள் கோஷமிட்டனர்.

Also read:  மேடையில் நாற்காலிக்காக சண்டை போட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ - வைரலாகும் வீடியோ

நிகழ்ச்சி நடைபெறும் முன்னதாக கொடிக் கம்பத்தை பழுதுபார்த்திருந்தால் இப்படி கட்சிக் கொடி கீழே விழுந்திருக்காதே என சக தலைவர் ஒருவரிடம் பிரியங்கா காந்தி ஆதங்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து விசாரிக்குமாறும் கூறியிருக்கிறார்.

Also read:  பிரதமர் மோடியின் புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ்650 கார் - என்ன ஸ்பெஷல்?

இதன் பின்னர் கட்சித் தொண்டர் ஒருவர் கம்பத்தில் ஏறி காங்கிரஸ் கொடியை பறக்கவிட்டுள்ளார். இதனிடையே இந்த களேபரத்தால் இந்நிகழ்ச்சியின் லைவ் லிங் நீக்கப்பட்டது. இருப்பினும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

top videos

    கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கட்சிக் கொடி ஏற்றமுடியாமல் போனது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது.

    First published:

    Tags: Congress, Sonia Gandhi