முகப்பு /செய்தி /இந்தியா / திடீர் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - மருத்துவமனை கொடுத்த அப்டேட்

திடீர் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி - மருத்துவமனை கொடுத்த அப்டேட்

சோனியா காந்தி

சோனியா காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Janvi

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சல் ஏற்பட்டதன் காரணத்தினால் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காய்ச்சல் ஏற்பட்டதன் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தகவலின்படி, மூச்சுக்குழாய் அழற்சியினால் 76 வயதான சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று காய்ச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Also Read : ஒரே தொகுதியில் போட்டியிட்ட 3 குடும்ப உறுப்பினர்கள்.. மருமகனை தோற்கடித்த அத்தை!

கடந்த ஜனவரி மாதம் டெல்லி மருத்துவமனையில் சுவாச தொற்று காரணத்தினால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டில் இரண்டாம் முறையாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Hospitalised, Sonia Gandhi