• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சத்தீஸ்கரில் முடிவுக்கு வந்த பாஜகவின் 15 ஆண்டு கால ஆட்சி!

சத்தீஸ்கரில் முடிவுக்கு வந்த பாஜகவின் 15 ஆண்டு கால ஆட்சி!

ரமண் சிங்

ரமண் சிங்

சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சத்தீஸ்கர் மாநிலத்தில், பாஜகவின் 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து 3 முறை ஆட்சியை கைப்பற்றிய ரமண் சிங் இம்முறை காங்கிரஸிடம் ஆட்சியை இழந்துள்ளார்.

    மத்தியப் பிரதேசத்தை பிரித்து 2000-ம் ஆண்டு உருவான சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் ஜோகி பதவியேற்றார்.

    இதைத்தொடர்ந்து 2003-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக தொடர்ந்து 3 முறை ஆட்சியைத் தக்கவைத்தது. அந்தக் கட்சியின் தலைவர் ரமண் சிங் 15 ஆண்டுகளாக சத்தீஸ்கரை ஆட்சி செய்து வந்தார்.

    இந்நிலையில், 90 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் கடந்த மாதம் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக ஓர் அணியாகவும், காங்கிரஸ் ஓர் அணியாகவும் களத்தில் இருந்தன. காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் எனும் கட்சியைத் தொடங்கிய அஜித் ஜோகி, மாயாவதியின் பகுஜன் சமாஜுடன் கைகோர்த்தார்.

    தேர்தல் பரப்புரையில் நக்சல்கள், விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டன. நக்சல்களுக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுகிறது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஆனால், நக்சல்களை கட்டுப்படுத்த முடியாத தோல்வியை, மறைப்பதற்காகவே பிரதமர் இக்குற்றச்சாட்டை கூறுவதாக காங்கிரஸ் தெரிவித்தது.

    விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும், அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 35 கிலோ அரிசி ஒரு ரூபாய் விலையில் வழங்கப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியும் வாக்காளர்களிடம் முக்கியத்துவம் பெற்றன.

    காங்கிரஸ் சார்பில் குர்மி சமூகத்தைச் சேர்ந்த, மாநிலத் தலைவர் பூபேஷ் பாகல் முன்னிறுத்தப்பட்டார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான குர்மி மற்றும் சாகு சமூகத்தினரில் பெரும்பாலானோர் சிறு வணிகத்திலும், விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள், தங்கள் வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளனர்.

    அஜித் ஜோகி, மாயாவதி கூட்டணி காங்கிரஸ் வாக்குகளை பிரிக்கும் என பாஜக எதிர்ப்பார்த்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகளில் அது எதிரொலிக்கவில்லை. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 68 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்துள்ளது. பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒரே காங்கிரஸ் எம்.பி.யான தமர்த்வார் சாஹூ, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் டி.எஸ்.சிங்டியோ  ஆகியோரில் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    இதனிடையே சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க நாளை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, ரமண் சிங் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாகவும் செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: