ஹோம் /நியூஸ் /இந்தியா /

49 பேர் ஆப்செண்ட்! காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்.. தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் விவரம்!

49 பேர் ஆப்செண்ட்! காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்.. தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் விவரம்!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல்

தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில், 662 வாக்குகள் பதிவாகியுள்ளதாக கட்சியின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் 662 வாக்குகள் பதிவாகியுள்ளன.

  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அனைத்து மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் வாக்களிக்கத் தகுதியுடைய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

  இதற்காக டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

  தமிழ்நாட்டில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

  இதையும் படிங்க: தமிழகத்திற்கு 100 மத்திய அமைச்சர்கள் கூட வரட்டும்.. மாநில உரிமையில் தலையிட்டால் எதிர்ப்போம் - ஜெயக்குமார்

  தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில், 662 வாக்குகள் பதிவாகியுள்ளதாக கட்சியின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகளின் மேல்பகுதி சீல் இடப்பட்டு இன்று இரவு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்படவுள்ளன.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Congress, Delhi