உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட கமிட்டிகள் கலைப்பு: காங்கிரஸ் அதிரடி!

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தோல்வியடைந்தார்.

news18
Updated: June 24, 2019, 8:47 PM IST
உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட கமிட்டிகள் கலைப்பு: காங்கிரஸ் அதிரடி!
காங்கிரஸ்
news18
Updated: June 24, 2019, 8:47 PM IST
உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளையும் கலைப்பதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சரிவர கட்சிப் பணி செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதனிடையே அங்குள்ள 12 தொகுதிகளுக்கு சட்டசபை இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளையும் கலைப்பதாக, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தின் வடக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது, கட்சி விதிமுறைகளை மீறியவர்கள் குறித்து ஆய்வு நடத்த மூன்று பேர் கொண்ட ஒழுங்குகாற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see:

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...