ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.4 லட்சம் வழங்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

''பேரிடர் மேலாண்மை விதிகளின்படி பேரிடர்களின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்'' : காங்கிரஸ்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆன்லைனில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

#SpeakUpforCovidNyay - என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இந்த பரப்புரை ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ''மக்கள் துன்பப்பட்டு இழப்பீடுகளை சந்திக்கும் நேரம் வரும் போதெல்லாம், மத்திய அரசு தூங்கி விடுகிறது. மத்திய அரசை எழுப்புவோம் வாருங்கள்'' என்று கூறியுள்ளார். இந்த பரப்புரையின்கீழ் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சரியான விவரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பவார் கெரா கூறுகையில், ''கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. கொரோனாவால், எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும். இந்த விவரத்தை மத்திய அரசு அளிக்காவிட்டால், அதனை ஒட்டுமொத்த இந்தியாவே வழங்குவதற்கு தயாராக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 4 லட்சத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்'', என்று கூறியுள்ளார்.

Also Read : ''இதை செய்ய தாமதப்படுத்தினால் இந்தியா மோசமான விளைவை சந்திக்கலாம்'' : எச்சரிக்கும் கெஜ்ரிவால்

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனா உயிரிழப்பு தொடர்பாக தவறான தகவல்களை மோடி அரசு அளிக்கிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இழப்பீடு தருவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. அத்துடன் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் அடைந்த தோல்வியை, மத்திய அரசு மறைக்கிறது.'' என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு அளித்த தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 4.7 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை 50 லட்சம் வரை இருக்கும் என்று, பிரபல செய்தி நிறுவனம் (Bloomberg) வெளியிட்ட தகவலை மேற்கோள்காட்டி, காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

Also read : விவசாயிகள் வென்றனர், மோடி அரசு பயந்து விட்டது: லாலு பிரசாத் யாதவ்

''பேரிடர் மேலாண்மை விதிகளின்படி பேரிடர்களின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ள காங்கிரஸ், இந்த தொகையை 50 ஆயிரமாக மோடி அரசு மாற்றியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் பிரச்சனை எழுப்பப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Congress, Covid-19, Rahul gandhi