Home /News /national /

லக்கிம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

லக்கிம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

 லக்கிம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

லக்கிம்பூர் விவகாரம்: குடியரசுத் தலைவரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி!

லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை நேரில் சந்தித்து ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் குழு மனு அளிக்க உள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாகினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பாஜவினர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ராவும் சம்பவ இடத்தில் இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுளனர். இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்யக்கோரி எதிர்ப்புகள் வலுத்தன. இதைத்தொடர்ந்து, உத்தர பிரதேச போலீசார் ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து, ஆசிஷ் மிஸ்ராவிடம் இன்று முதல் 3 நாட்கள் போலீஸ் காவலில் அவரிடம் விசாரணை நடத்த லக்கிம்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இந்நிலையில், லக்கிம்பூரில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை நேரில் சந்தித்து ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் தலைவர்கள் குழு மனு அளிக்க உள்ளது.

    விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது காங்கிரசின் கோரிக்கை. மேலும் சம்பவத்திற்கு காரணமான மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது. ஏற்கனவே லக்கிம்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை ராஜினாமா செய்ய கோரியும் மகாராஷ்டிரம் முழுவதும் நேற்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்தை ஆளும் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை நடத்தின.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: President Ramnath Govind, Rahul gandhi, Uttar pradesh

    அடுத்த செய்தி