• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 135 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியை அவுட் சோர்ஸ் செய்வதா- பிரசாந்த் கிஷோருக்கு எதிர்ப்பு?

135 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியை அவுட் சோர்ஸ் செய்வதா- பிரசாந்த் கிஷோருக்கு எதிர்ப்பு?

ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர்

ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சேரும் சாத்தியங்கள் பற்றிய செய்திகள் உருவாகத் தொடங்கியவுடனேயே காங்கிரஸ் கட்சியின் உள்ளே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

  • Share this:
    காங்கிரஸ் கட்சியில் பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சேரும் சாத்தியங்கள் பற்றிய செய்திகள் உருவாகத் தொடங்கியவுடனேயே காங்கிரஸ் கட்சியின் உள்ளே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

    மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வீட்டில் ஜன்மாஷ்டமியான ஆகஸ்ட் 30-ம் தேதியன்று அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடியதாக பிரபல ஆங்கில நாளேடு தன் செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

    அதில் பலரும் 135 ஆண்டுகால காங்கிரஸ் எனும் நிறுவனத்தைக் கட்டிக் காத்து வந்துள்ளோம், இப்போது வெளியிலிருந்து வரும் ஒருவரிடம் கட்சியை அவுட் சோர்ஸ் செய்வதா என்று தங்கள் அதிருப்தியை பிரசாந்த் கிஷோருக்கு எதிராக தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும் காத்திருந்து கவனிக்கும் அணுகுமுறையை இவர்கள் கடைப்பிடிக்கவுள்ளனர்.

    சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியை புனரமைப்பு செய்யும் செயல் திட்டத்துக்கு வந்ததையடுத்து இந்த கபில் சிபல் வீட்டு கூட்டத்தில் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மனீஷ் திவாரி, சசி தரூர், முகுல் வாஸ்னிக், விவேக் தங்க்கா, புபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் கபில் சிபல் வீட்டில் நடந்த சந்திப்பில் முக்கிய அங்கத்தினர்கள் என்று ஆங்கில நாளேடு கூறுகிறது.

    ஆனால் இன்னும் சில மூத்த தலைவர்கள் பிரசாந்த் கிஷோரை உள்ளே கொண்டு வருவது சரிதான் என்று ஆதரவு தெரிவித்ததாகவும் தெரிகிறது.

    காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே ஏகப்பட்ட திறமையான தலைவர்கள் உள்ளனர் என்ற கருத்தோட்டமும் கட்சியில் நிலவுகிறது.

    பிரசாந்த் கிஷோரை பொதுச் செயலாளராக நியமிக்க ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை தெரிந்து கொள்ள காங்கிரஸ் செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் 135 ஆண்டு பழைய கட்சி, ஏதோ ஸ்டார்ட் அப் கிடையாது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் ஸ்டாலின், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, ஆகிய தலைவர்களால்தான் வெற்றி பெற்றதே தவிர பிரசாந்த் கிஷோரின் உத்தியின் பங்களிப்பினால் அல்ல என்று காங்கிரஸ் பெருந்தலைகளில் சில பிரசாந்த் கிஷோரை எதிர்க்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் 2017 உ.பி.தேர்தலிலேயே பிரசாந்த் கிஷோரின் உத்தி பல்லிளித்தது என்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் அபிப்ராயப்படுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: