பெருநிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு ! காங்கிரஸ் தலைவர்கள் கடும் விமர்சனம்

பெருநிறுவனங்களில் கைகளுக்கு அதிக பணத்தை அளிப்பது பற்றாக்குறையை சரிசெய்யாது. கிராமப் புறத்திலுள்ளவர்ளுக்கு அதிகப் பணத்தை அளிப்பதன் மூலம் வாங்கும் திறனை அதிகரிக்கவேண்டும்.

news18
Updated: September 21, 2019, 6:06 PM IST
பெருநிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு ! காங்கிரஸ் தலைவர்கள் கடும் விமர்சனம்
காங்கிரஸ்
news18
Updated: September 21, 2019, 6:06 PM IST
பொருளாதார மந்தநிலையை சரிசெய்வதற்கு பெரு நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. 

பொருளாதார மந்தநிலையை சமாளிக்கும் நடவடிக்கையாக மத்திய நிதியமைச்சகம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நேற்று கோவா மாநிலம் பானாஜியில் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்குப் பிறகு, பெருநிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்குப் இந்தியப் பங்குச் சந்தைகள் ஒரே நாளில் பெரும் ஏற்றம் அடைந்தது.

ஆனால், இந்த வரிக்குறைப்பின் இந்திய அரசு 1.45 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.
Loading...


இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவில், ’இந்த அரசால் எடுக்கப்படும் தொடர்ச்சியான வரிக்குறைப்பும் நிலையற்ற முடிவுகளும் பங்குச் சந்தைகளில் பெரிய ஏற்றங்களைக் கொடுக்கலாம். ஆனால், பின்னாள்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும். அதனால், இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகிவிடும்’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், ‘பெருநிறுவனங்களில் கைகளுக்கு அதிக பணத்தை அளிப்பது பற்றாக்குறையை சரிசெய்யாது. கிராமப் புறத்திலுள்ளவர்ளுக்கு அதிகப் பணத்தை அளிப்பதன் மூலம் வாங்கும் திறனை அதிகரிக்கவேண்டும். அரசால், பணக்காரர்கள் பலனடைவார்கள். ஏழைகளின் இருப்பே கேள்விக்குள்ளாகிறது’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த அசாதுதின் ஓவைசி, ‘வேலை வாய்ப்பற்ற இந்த பொருளாதார பிரச்னைகளில் சுமையாக இருக்கும் வரிகளில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்கவேண்டும்? யாருக்கு சேவை வரி அளிக்க வேண்டும்? பெரு நிறுவனங்களுக்கு இருக்க வேண்டுமா? உங்களுக்கு இருக்க வேண்டுமா? யாருக்கு வரி விலக்கு தேவையானது? தொழிலதிபர்களுக்கா? உழைக்கும் மக்களுக்கா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணத்துக்காகத்தான் பெரு நிறுவனங்களுக்கு இந்த வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், பொருளாதாரப் பிரச்னைகளை மறைக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...