காங். 70 ஆண்டுகளில் செய்யாததை நான் 5 ஆண்டுகளில் செய்ய முடியுமா? மோடி
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை ஒழித்து விடும் என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்கின்றன. பொய் பிரசாரம் செய்யும் கட்சிகளுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும்’ என்று மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி
- News18
- Last Updated: April 4, 2019, 12:58 PM IST
அம்பேத்கரை அனைத்து விதங்களிலும் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பீகார் மாநிலம் ஜாமியூ பகுதியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ நான் வாக்குறுதி அளித்த அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன் என்று கூறவில்லை. நிறைவேற்ற வேண்யடிய பணிகள் இருக்கின்றன. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் முடிக்காத பணியை அவர்கள் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் முடித்து விடுவார்களா?. இல்லை, நான் 5 ஆண்டுகளில் முடித்துவிட்டேன் என்று கூற முடியுமா?. இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. உங்களது ஆசிர்வாதம் எனக்கு தேவைப்படுகிறது.
தீவிரவாதம், விலைவாசி, வன்முறை, ஊழல், கருப்பு பணம் உள்ளிட்டவை காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோது கடுமையாக உயர்ந்தன. நாட்டின் வளம், நம்பகத்தன்மை, அமைதி, ராணுவத்தின் மரியாதை உள்ளிட்டவையும் காங்கிரஸ் ஆட்சியில் சீர் குலைந்தன.
அம்பேத்கரை அனைத்து விதங்களிலும் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. மக்கள் மனதில் அம்பேத்கரின் பெயரை நீக்க காங்கிரஸ் நடவவடிக்கை எடுத்தது” என்று கூறினார்.முன்னதாக, கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘பாகிஸ்தானுக்கு உதவுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை மக்கள் முடிவுசெய்ய வேண்டும். ராணுவ நடவடிக்கைக்கு ஆதாரம் கேட்டு முப்படையினரை அவமானபடுத்துகின்றனர். எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர்கள் போல் பேசுகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது எல்லாம், பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம், விலைவாசி, வன்முறை, ஊழல், கறுப்பு பணம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. காங்கிரஸ் ஆட்சியில் முப்படையினரின் நற்பெயர், நேர்மை ஆகியவை மதிக்கப்படவில்லை. சொந்த குடும்பத்தினருக்கு பாரத் ரத்னா விருது வழங்கிய காங்கிரஸ், அம்பேத்கருக்கு வழங்கவில்லை.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை ஒழித்து விடும் என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்கின்றன. பொய் பிரசாரம் செய்யும் கட்சிகளுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும்’’ என்று மோடி பேசினார்.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE:
பீகார் மாநிலம் ஜாமியூ பகுதியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ நான் வாக்குறுதி அளித்த அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன் என்று கூறவில்லை. நிறைவேற்ற வேண்யடிய பணிகள் இருக்கின்றன.
தீவிரவாதம், விலைவாசி, வன்முறை, ஊழல், கருப்பு பணம் உள்ளிட்டவை காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோது கடுமையாக உயர்ந்தன. நாட்டின் வளம், நம்பகத்தன்மை, அமைதி, ராணுவத்தின் மரியாதை உள்ளிட்டவையும் காங்கிரஸ் ஆட்சியில் சீர் குலைந்தன.
அம்பேத்கரை அனைத்து விதங்களிலும் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. மக்கள் மனதில் அம்பேத்கரின் பெயரை நீக்க காங்கிரஸ் நடவவடிக்கை எடுத்தது” என்று கூறினார்.முன்னதாக, கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘பாகிஸ்தானுக்கு உதவுபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை மக்கள் முடிவுசெய்ய வேண்டும். ராணுவ நடவடிக்கைக்கு ஆதாரம் கேட்டு முப்படையினரை அவமானபடுத்துகின்றனர். எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர்கள் போல் பேசுகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது எல்லாம், பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம், விலைவாசி, வன்முறை, ஊழல், கறுப்பு பணம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. காங்கிரஸ் ஆட்சியில் முப்படையினரின் நற்பெயர், நேர்மை ஆகியவை மதிக்கப்படவில்லை. சொந்த குடும்பத்தினருக்கு பாரத் ரத்னா விருது வழங்கிய காங்கிரஸ், அம்பேத்கருக்கு வழங்கவில்லை.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இட ஒதுக்கீட்டை ஒழித்து விடும் என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புரை செய்கின்றன. பொய் பிரசாரம் செய்யும் கட்சிகளுக்கு தேர்தல் மூலம் மக்கள் தண்டனை வழங்க வேண்டும்’’ என்று மோடி பேசினார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:
ORANGE CAP:
PURPLE CAP:
RESULTS TABLE:
SCHEDULE TIME TABLE: