5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் அக்கட்சி மாநில கட்சியாக மாறி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார் விமர்சித்துள்ளார்.
மினி நாடாளுமன்ற தேர்தல் என கருதப்படும் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது.
குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பறி கொடுத்துள்ளது. தற்போது தேசிய அளவில் ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான அஷ்வனி குமார் கூறியதாவது-
பஞ்சாப் தேர்தல் முடிவுகள் புதிய அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது. நான் முன்னரே கூறியது போன்று பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு அமையவுள்ளது. ஏற்கனவே உள்ள கட்சிகளின் நடவடிக்கைகளால் மக்கள் சோர்வடைந்து விட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான நிலைமை குறித்த நான் மகிழ்ச்சி அடையவில்லை. நாட்டின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது காங்கிரஸ் தேசிய கட்சியில் இருந்து மாநில கட்சியாக மாறி வருகிறது.
இதையும் படிங்க -
5 மாநில தேர்தல்: காங்கிரஸ் வாக்கு சதவீதம் சரிந்தது.. உ.பி.யில் 3% கூட எட்டவில்லை
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு செய்துவரும் பணிகளைப் பார்த்து, பஞ்சாபில் வாக்குகள் விழுந்திருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க -
'தோல்வியில் இருந்து பாடம் பெறுவோம்; மக்கள் நலனுக்கான பணிகள் தொடரும்' - 5 மாநில தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கருத்து
இதற்கிடையே, தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் பெறுவதாக கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.