இட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

இட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மோகன் பகவத்
  • Share this:
பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் தலித் மக்களுக்கு எதிரானவர்கள் என்றும், அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு முடிவு கட்ட துடிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜகவில் உள்ள ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள், ஆர்எஸ்எஸ்சின் கருத்துகளை கேட்க வேண்டும் என்றும், ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் தெரிவித்தார். இடஒதுக்கீடு குறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்களின் நலனையும், எதிர்ப்பவர்கள் ஆதரிப்பவர்களின் நலனையும் மனதில் கொண்டு பேச வேண்டும் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இடஒதுக்கீடு எதிர்ப்பு மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இடஒதுக்கீடு குறித்த விவாதம் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிஎல் புனியா, பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானவை என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேறுவதை பாஜக, ஆர்எஸ்எஸ் விரும்பாது என்றும் சாடினார். அவர்கள் இடஒதுக்கீட்டுக்கு முடிவுகட்ட திட்டமிட்டு செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
First published: August 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்