• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்திக்க நாளை உத்தரப் பிரதேசம் செல்கிறார் ராகுல் காந்தி

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்திக்க நாளை உத்தரப் பிரதேசம் செல்கிறார் ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்துக்கு நாளை ராகுல் காந்தி செல்கிறார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

  • Share this:
    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க இருதினங்களுக்கு முன் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்களின் வருகையை கண்டித்து, விவசாயிகள் கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது.

    இதில் கார் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியைக் கைது செய்த உத்தரப் பிரதேச காவல்துறையினர் 40 மணி நேரமாக விடுவிக்கவில்லை. இந்தநிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும் அக்கட்சியின் எம்.பியுமான ராகுல் காந்தி, நாளை லக்கிம்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் செல்கிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளார்.

    ராகுல் காந்தி தலைமையில் 5 பேர் கொண்ட குழு செல்லவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: