• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அதானி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ ஹெராயின் குறித்து நார்கோடிக்ஸ் ஏன் அமைதிகாக்கிறது - காங்கிரஸ் கேள்வி

அதானி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ ஹெராயின் குறித்து நார்கோடிக்ஸ் ஏன் அமைதிகாக்கிறது - காங்கிரஸ் கேள்வி

Congress

Congress

3,000 கிலோ ஹெராயின் கடத்திய பெரும் புள்ளிகள் குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அமைதி காப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

  • Share this:
    இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறினர்.

    கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிர்ந்தனர். சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ‘ஃபேஷன் டிவி இந்தியா’ இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை கடல் பகுதியில் இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்கள், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததால் அந்த கப்பல் முழுதும் 7 மணி நேரம் சோதனை நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷம்மா முகம்மது, ‘போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறிய மீன்களைப் பிடிப்பதில் பரபரப்பாக உள்ளது. ஆனால், குஜராத்திலுள்ள அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ ஹெராயின் கடத்திய பெரிய மீன்கள் குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அமைதியாக உள்ளது.

    யாருடைய உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்து செயல்படும் போதைப் பொருள் கும்பலின் பெரும்புள்ளிகளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்யாமல் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: