வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள் - மம்தா பானர்ஜி

News18 Tamil
Updated: May 23, 2019, 5:01 PM IST
வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள் - மம்தா பானர்ஜி
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி
News18 Tamil
Updated: May 23, 2019, 5:01 PM IST
வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்குகள் எண்ணி இன்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

மதியம் 4 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 350 தொகுதிகளிலும், காங்கிரஸ் 90 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 102 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி கூறும்போது, ‘‘வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள். ஆனால், தோல்வியடைந்தவர்கள் எல்லாம் தோற்றுப்போனவர்கள் அல்ல. நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், தேர்தல் முடிவுகள் குறித்து நன்கு ஆராய வேண்டும், அதை உங்களிடம் பகிரவேண்டும். ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு வாக்குகள் எண்ணும் பணி முழுவதுமாக முடியட்டும்’’ என்று கூறியுள்ளார்.
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...