காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரில், காங்., சார்பில் நடந்த விவசாயிகள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், பிரியங்கா பேசியதாவது: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு, பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர்களும் அவமரியாதை செய்துள்ளனர். அவர்கள் போராட்டம் நடத்துவது ஏன் என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை.
போராட்டம் நடத்தும் விவசாயிகளை தேச விரோதி என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், மத்திய அரசு தான் தேசத்திற்கு எதிராக செயல்படுகிறது. பாக்., சீனா செல்வதற்கு எல்லாம் நேரமிருந்த பிரதமர் மோடிக்கு, போராடி வரும் விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை. காங்., மத்தியில் ஆட்சிக்கு வந்தால், புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கிசான் பஞ்சாயத்துக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி மோடி அரசையும் பாஜகவையும் தாக்கிப் பேசினார்.
“3 விவசாயச் சட்டங்களும் பயங்கரமானது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தச் சட்டங்களை தூக்கி எறிவோம். சட்டங்களை ரத்து செய்ய காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
மண்டிகளை மூடுமாறு மிகவும் நைச்சியமாக இந்த விவசாயச்சட்டங்களை வடிவமைத்துள்ளார்கள். விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையும் படிப்படியாகப் போய்விடும், பதுக்கல் அதிகமாகும்.
விவசாயிகள் செல்வாக்கு சரிந்து பணக்காரர்களின் செல்வாக்குதான் அதிகரிக்கும்” என்றார்.
இது தொடர்பாக பாஜக அரசின் உ.பி. அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கூறும்போது, விவசாயிகளை வைத்து நாடகம் நடத்தி வருகின்றனர். காங்கிரஸார் பிரதமரை எதிர்க்கட்டும் நாட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்றார்.
விவசாயிகள் குறைந்த பட்ச ஆதாரவிலை போகாது என்று சட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியது ஆனால் மத்திய அமைச்சர் எழுத்து பூர்வ உத்தரவாதம் அளிக்கிறேன் என்றார். எழுத்து பூர்வ உத்தரவாதமான காகித உத்தரவாதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்கின்றனர் விவசாயிகள்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.