ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு ஓலா, உபேரா காரணம்? நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பும் காங்கிரஸ்

பேருந்து, லாரி விற்பனை சரிவுக்கும் 21-ம் நூற்றாண்டு மக்கள் அதனை வாங்குவதை நிறுத்தியதுதான் காரணமா? இது சரியா நிர்மலா சீதாராமன்?

news18
Updated: September 11, 2019, 7:01 PM IST
ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு ஓலா, உபேரா காரணம்? நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பும் காங்கிரஸ்
மாதிரிப் படம்
news18
Updated: September 11, 2019, 7:01 PM IST
“பொருளாதார வீழ்ச்சிக்கு வாக்காளர்கள் தான் காரணம். மக்கள் தான் காரணம் என்று குற்றம்சாட்டுங்கள். ஆனால், நிதியமைச்சரே பொருளாதாரத்தை பா.ஜ.க கையாளுகிறது” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலையில் பா.ஜ.க அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘21-ம் நூற்றாண்டின் நவீன இளைஞர்கள் ஓலா, உபர் அதிகமாக பயன்படுத்துவதால்தால் கார் வாங்க விரும்பவில்லை. அதனால், தான் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியடைந்துள்ளது’ என்று தெரிவித்தார். அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய பேச்சை நெட்டீசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


இந்த நிலையில், நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘ஆமாம்... நீங்கள் பேசியது சிறப்பானது. வாக்காளர்களைக் குற்றம்சாட்டுங்கள்.. எல்லாரையும் குற்றம்சாட்டுங்கள். ஆனால், நிதியமைச்சரே பொருளாதாரத்தை பா.ஜ.க கையாளுகிறது.

பேருந்து, லாரி விற்பனை சரிவுக்கும் 21-ம் நூற்றாண்டு மக்கள் அதனை வாங்குவதை நிறுத்தியதுதான் காரணமா? இது சரியா நிர்மலா சீதாராமன்? மோடியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனைக் கடந்துள்ளது. பொருளாதாரம் ஐந்து டிரில்லியனைக் கடக்கும்..

ஆனால், எப்படி? இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதற்கும் எதிர்கட்சிகள்தான் காரணம் என்று கூறப்போகிறீர்களா? ஓலா, உபர் எல்லாவற்றையும் அழித்துவிட்டார்கள். எது நல்லது நடந்தாலும், அது மோடியால் செய்யப்பட்டது. எது கெட்டது நடந்தாலும் அது மற்றவர்களால் நடைபெற்றது. பின்னர், மக்கள் ஏன் உங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Loading...

Also see:

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...