ஒக்கலிகா, லிங்காயத்து கணக்கு: கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.கவின் வியூகம்!

பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பாவும், மற்றொரு பா.ஜ.க எம்.எல்.ஏ அசோக்கும் அங்கே சென்றனர். அதேபோல, மாண்டியா தொகுதியில் பா.ஜ.க ஆதரவுடன் எம்.பியாக வெற்றி பெற்ற நடிகை சுமலதாவும் அங்கே சென்றார்.

ஒக்கலிகா, லிங்காயத்து கணக்கு: கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.கவின் வியூகம்!
காங்கிரஸ் எம்.எல்.ஏகள்
  • News18
  • Last Updated: May 26, 2019, 6:03 PM IST
  • Share this:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலுள்ள பா.ஜ.க தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை காங்கிரஸின் கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் சுதாகர் நேரில் சென்று சந்தித்தனர். அதேநேரத்தில் பா.ஜ.க தலைவர் எடியூரப்பா, அசோக், சுயேட்சை எம்.பி சுமலதா அம்பரிஷ் ஆகியோர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்திக்கச் சென்றது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வெளியான மக்களவைத் தேர்தல் முடிவில் கர்நாடகாவிலுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. கர்நாடகாவில், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அந்தக் கூட்டணி ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜார்ஹிகோலி, சுதாகர் ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்களும் பல மாதங்களாக கட்சியிலிருந்து விலக உள்ளதாக மிரட்டிவருகின்றனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்தபோது, சிவாஜிநகர் எம்.எல்.ஏ ரோஷன் பெய்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். இந்தநிலையில், இன்று காலையில், பெங்களூருவிலுள்ள பா.ஜ.க தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா இல்லத்துக்குச் சென்று, காங்கிரஸ் கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோலி, சுதாகர் அவரைச் சந்தித்துப் பேசினர்.


அதேநேரத்தில், பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பாவும், மற்றொரு பா.ஜ.க எம்.எல்.ஏ அசோக்கும் அங்கே சென்றனர். அதேபோல, மாண்டியா தொகுதியில் பா.ஜ.க ஆதரவுடன் எம்.பியாக வெற்றி பெற்ற நடிகை சுமலதாவும் அங்கே சென்றார். இந்தச் சந்திப்பு தற்செயலானது என்று கூறப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அரசியல் ஆய்வாளர் மாதவ் பிரகாஷ், ‘இந்தச் சந்திப்பு தற்செயலான சந்திப்பு இல்லை. தற்போது முதல்வராக இருக்கும் குமாரசாமி, ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர். எடியூரப்பா, லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். குமாரசாமியின் ஆட்சியை எடியூரப்பா மூலம் கவிழ்த்தால், ஒக்கலிகா சமூகத்திடம் வெறுப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், மற்றொரு ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா மூலம் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்கிறது’ என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் மொத்தம் 225 சட்டமன்ற உறுப்பினர்கள். பா.ஜ.கவுக்கு தற்போது 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 80 எம்.எல்.ஏக்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 எம்.எல்.ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏவும் உள்ளனர். மொத்தம் 118 எம்.எல்.ஏக்களுடன் கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.Also see:

First published: May 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading