ஹோம் /நியூஸ் /இந்தியா /

15 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளமுடியும்போது, பெண்களின் திருமண வயதை ஏன் உயர்த்த வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

15 வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளமுடியும்போது, பெண்களின் திருமண வயதை ஏன் உயர்த்த வேண்டும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பிரதேச அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சஜ்ஜன் சிங் வெர்மாவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • News18 India
  • 2 minute read
  • Last Updated :

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய பிரதேச அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சஜ்ஜன் சிங் வெர்மாவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“பெண்கள் 15 - 17 வயதிலேயே குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியும், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தத் தேவையில்லை” என செய்தியாளர்கள் சந்திப்பில் சஜ்ஜன் சிங் பேசியதையடுத்து அவருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவது குறித்து தற்போது நாடு முழுவதும் பேச்சு எழுந்துள்ளது. விவாதிக்கப்பட்டு வரும் இந்த விவகாரம் தொடர்பாக சம்மன் எனும் திட்டத்தின் தொடக்க விழாவில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், ஆண்களுக்கு நிகராக பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தலாமா, வேண்டாமா என்பதை, பெண்க்ள் மீதான வன்முறைகளுடன் ஒப்பிட்டு பேசிய சிவ்ராஜ் சிங் சவுகான், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மரியாதை மற்றும்

உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் விவகாரத்திற்கு ஆதவளிக்கும் விதமாக முதல்வர் பேசியதற்கு செய்தியாளர்கள் சந்திப்பின் போது பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் சிங் வெர்மா, சிவ்ராஜ் சிங் சவுகான் மருத்துவரா அல்லது விஞ்ஞானியா? பெண்கள் 15 - 17 வயதிலேயே குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியும், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தத் தேவையில்லை என கூறினார்.

மேலும் இந்தியாவிலேயே சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலங்கள் வரிசையில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்காமல் அரசியலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஈடுபட்டுள்ளார் என கூறினார்.

காங்கிரஸ் தலைவர் வெர்மாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளார் நேஹா பாகா, இந்தியாவின் மகள்களை சஜ்ஜன் அவமதித்துவிட்டார். அவரின் கட்சித் தலைவர் கூட ஒரு பெண் என்பதை மறந்துவிட்டாரா? பிரியங்கா காந்தி கூட ஒரு பெண் தான். இதற்காக அவரை மன்னிப்பு கேட்க சோனியா நிர்பந்திக்க வேண்டும், மற்றும் அவரை கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில்,  எம்.எல்.ஏ. சஜ்ஜன் சிங் வெர்மாவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

First published:

Tags: Congress, Madhya pradesh