ராஜினாமா முடிவில் 15 எம்.எல்.ஏ.க்கள் - கர்நாடகாவில் குமாரசாமியின் கூட்டணி அரசு கவிழ்கிறதா?

திடீர் அரசியல் மாற்றத்தால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜினாமா முடிவில் 15 எம்.எல்.ஏ.க்கள் - கர்நாடகாவில் குமாரசாமியின் கூட்டணி அரசு கவிழ்கிறதா?
குமாரசாமி - சிவக்குமார்
  • News18
  • Last Updated: July 6, 2019, 2:39 PM IST
  • Share this:
கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் ராஜினாமா செய்ய இருப்பதால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மஜத கட்சியின் குமாரசாமி முதல்வராக இருந்து வருகிறார்.

கூட்டணிக்குள் அவ்வப்போது குழப்பம் ஏற்பட்டாலும் ஆட்சிக்கு பாதிப்பு இல்லாமல் கூட்டணி அரசியல் நகர்ந்து கொண்டிருந்தது.


நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதால், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்டதுபோலவே, ஒற்றை எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். எனினும், ஆட்சியமைக்கத்தேவையான 113 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி அரசிடம் இருந்தனர்.

எனினும், பாஜக எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் வேலைகளை மறைமுகமாக செய்துகொண்டே இருந்தது. இந்நிலையில், இன்று திடீரென காங்கிரஸ் மற்றும் மஜதவைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. இதனை அடுத்து, மேலும் பல காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடித்துடன் சபாநாயகரை சந்திக்க உள்ளனர்.

8 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் அரசின் பலம் 111 ஆக குறையும். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் அமைச்சருமான சிவக்குமார் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகிறார்.

எம்.எல்.ஏ.க்களை பேசி வழிக்குகொண்டுவரும் முயற்சியிலும் காங்கிரஸ் இறங்கியுள்ளது. இந்த திடீர் அரசியல் மாற்றத்தால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பாஜக 105 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published: July 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading