நேதாஜியை கொன்றதே காங்கிரஸ்தான் : பாஜக எம்.பி. பரபரப்பு பேச்சு

நேதாஜியை கொன்றதே காங்கிரஸ்தான் : பாஜக எம்.பி. பரபரப்பு பேச்சு

Netaji Subhash Chandra Bose

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ல், தைபேயில் நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு, ஆர்டிஐ கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அது உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 • Share this:
  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறப்புக்கு காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ., எம்.பி., சாக்சி மகாராஜ் குற்றம்சாட்டி உள்ளார்.

  நேதாஜி சுபாஷ் சந்திர போசின், 125வது பிறந்த நாள் விழா கடந்த 23ம் தேதி கொண்டாடப்படது. 'பரக்ரம் திவாஸ்' எனும் வலிமை தினமாக கொண்டாடிய மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளை வலிமை தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  இந்நிலையில், உ.பி., மாநிலம் உன்னாவ் தொகுதி பா.ஜ., எம்.பி., சாக்சி மகாராஜ், நேதாஜி இறப்பு குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உ.பி.,யில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

  “மகாத்மா காந்தியடிகளும், நேருவும், நேதாஜியின் புகழுக்கு முன் நிற்க முடியாது. நேதாஜி இறப்புக்கு காங்கிரஸ் தான் காரணம்.

  இந்திய சுதந்திரப்போராட்டத்தில் நேதாஜி பெரிய இடம் வகிக்கிறார். அவர் மரணத்தில் இன்றும் ஏன் இவ்வளவு புதிர்? ஏன் பண்டித நேரு எந்த விசாரணையையும் வைக்கவில்லை?

  அவரது மரணம் பற்றிய உண்மை வெளி வர வேண்டும்” என்றார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ல், தைபேயில் நடந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு, ஆர்டிஐ கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அது உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: