• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் பிரியங்கா காந்தி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் பிரியங்கா காந்தி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஏன் இதுவரை பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்றும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    உத்தர பிரதேசத்தி லக்கிம்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பிரியங்கா காந்தியின் நடமாட்டம் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது.

    இந்த விபத்திலும் இதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களிலும் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். அவர்களை பார்க்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை  தடுத்து நிறுத்திய போலீசார், 30 மணி நேரமாக தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.  இது தொடர்பாக வீடியோ ஒன்றைய வெளியிட்ட பிரியங்கா காந்தி,    28 மணி நேரத்திற்கும் மேலாக எந்த உத்தரவும் இன்றி தான் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  குற்றத்தில் தொடர்பு உடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    பிரியங்கா


    இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஏன் இதுவரை பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்றும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: பண்டோரா பேப்பர்ஸ் -முறைகேடு முதலீடு சர்ச்சையில் இந்திய பிரபலங்கள்: கூட்டுக் குழு விசாரணை!


    ட்ரோன் மூலம் கண்காணிப்பு

    இதனிடையே தடுப்பு காவலில் உள்ள  பிரியங்கா காந்தி ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் வீடியோவுடன் கூடிய ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அதில், “யார் பொறுப்பேற்பார்கள், யாருடைய ட்ரோன் இது மற்றும் ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் படிக்க: உ.பியில் போராடும் விவசாயிகள் மீது ஏறிச் செல்லும் வாகனங்கள்- பதறவைக்கும் வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: