புரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

ஒடிஷாவில் புரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி
புரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் (கோப்புப்படம்)
  • Share this:
புரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் நடத்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரத யாத்திரை நடத்தும் பட்சத்தில் பொதுமக்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

10 முதல் 12 நாட்கள் நடக்க உள்ள புரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் நடத்த கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து ஒடிஷா மாநில அரசு, மத்திய அரசு உள்ளிட்ட 12 பேர் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இவற்றை தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தனர்.

Also see:அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், புரியில் மட்டுமே தேரோட்டம் பக்தர்களின்றி நடத்த வேண்டும் என்றும் வேறு எங்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர். நிலைமை கைமீறிச் சென்றால் மாநில அரசே தடை விதிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading