வீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு

வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிந்து வீடு திரும்பும்போது அவர்களுக்கு ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை பீகார் அரசு வழங்கிவருகிறது.

வீடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆணுறைகள் வழங்கும் பீகார் அரசு
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர். பீகார் மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் சென்று வேலை பார்த்து வந்த நிலையில், ஏராளமானோர் பீகாருக்குத் திரும்பியுள்ளனர். பீகார் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களுக்கான தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து வீடு திரும்பும்போது அம்மாநில சுகாதாரத்துறை அரசு சார்பில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதாரத்துறை சர்வேயில், இந்திய அளவில் அதிக அளவில் கருத்தலில் பீகார் முதலிடத்தில் உள்ளது. பீகாரில் ஒரு பெண்ணுக்கு 3.4 என்ற அளவில் கருத்தல் அளவு உள்ளது. ஆணுறைகள் வழங்குவது குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘ஹோலி, தீபாவளி பண்டிகைகளுக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் மார்ச், நவம்பர் மாதங்களில் கருத்தல் அளவு அதிகமாக உள்ளதை ஏற்கெனவே கவனித்துள்ளோம். எனவே, தேவையற்ற கருத்தரித்தலை தவிர்க்கும் பொருட்டு ஆணுறைகள் வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளனர்.






Also see:
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading