ஹோம் /நியூஸ் /இந்தியா /

8,9,10 வகுப்பு பள்ளி மாணவர்களின் ஸ்கூல் பேக்கில் ஆணுறை.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்

8,9,10 வகுப்பு பள்ளி மாணவர்களின் ஸ்கூல் பேக்கில் ஆணுறை.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் பையில் ஆணுறை இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெங்களூருவில் 8,9,10 வகுப்பு பள்ளி மாணவர்களின் பைகளில் சோதனையிட்ட போது ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் இருப்பதை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தொடர்ந்து பள்ளிகளில் வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன்களை எடுத்து வந்து பயன்படுத்துவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாக வாரியங்களின் சங்க அதிகாரிகள் பள்ளிக் குழந்தைகளின் பைகளைச் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் பெங்களூரு நகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களின் பைகளில் சோதனை நடத்தியபோது அதிர்ச்சியடைந்தனர். சோதனையில் 8, 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்து செல்போன்கள் தவிர, ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், லைட்டர்கள், சிகரெட்டுகள் இருந்ததை கண்டு வாயடைத்து போனார்கள். 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் பையில் ஆணுறை இருப்பதை கண்டுபிடித்து அதிகாரிகள் அந்த சிறுமியிடன் கேட்டபோது அவர் தன் நண்பர்களை குற்றச்சாட்டினார்.

இதையும் படிங்க: நடிகை அனுஷ்யாவின் ஆபாச போட்டோ?.. மார்பிங் கும்பல் அட்டூழியம்.. புஷ்பா நடிகையை குறி வைத்தது ஏன்?

இந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய சோதனையால் அனைத்து பள்ளிகளுமே பரபரப்பாக காணப்பட்டன. மேலும் கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர் -ஆசிரியர்கள் கூட்டம் நடத்த உத்தரவிட்ட நிலையில் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மாணவர்கள் பையைச் சோதனையிட்டது குறித்து ஆசிரியர்கள் கூறியதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் பையில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் இருப்பதை கண்டு கர்நாடக மாநிலமே பரபரப்பு தொற்றிக்கொண்டது.

First published:

Tags: Bengaluru, School Bag