முகப்பு /செய்தி /இந்தியா / கொரோனா லாக்டவுன் காலத்தில் உச்சம் தொட்ட ஆணுறை, கருத்தடை மாத்திரை விற்பனை - ஆய்வில் தகவல்

கொரோனா லாக்டவுன் காலத்தில் உச்சம் தொட்ட ஆணுறை, கருத்தடை மாத்திரை விற்பனை - ஆய்வில் தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோவிட் ஊரடங்கு காலக்கட்டத்தில் நாட்டில் ஆணுறை, கருத்தடை மாத்திரை விற்பனை உச்சம் தொட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2020இல் உலகம் வரலாறு காணாத வகையில் பெருந்தொற்று பரலை கண்டது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் முழு முடக்கம் எனப்படும் லாக்டவுன் என்ற யுக்தியை பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டன. இந்தியாவிலும் 2020 மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

லாக்டவுன் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிற்கும் முடங்கும் சூழல் ஏற்பட்டது. இதன் மறைமுக விளைவாக 2020-21, 2021-21 ஆகிய காலக்கட்டத்தில் நாட்டில் கருத்தடை சாதனங்கள் விற்பனை பன்மடங்கு உயர்ந்துள்ளது ஆய்வில் தெரிவித்துள்ளது. சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு இது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

கோவிட் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த 2021-25 காலக்கட்டத்தில் இந்தியாவில் ஆணுறை விற்பனை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 31.45 ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல கருத்தடை மாத்திரை விற்பனையும் 8.7 சதவீதம் உயர்ந்து 57.1 லட்சம் கருத்தடை மாத்திரைகள் விற்பனையாகியுள்ளது.

முதலகட்ட ஊரடங்கு காலத்தில் விற்பனை உயர்ந்த நிலையில், அடுத்த கட்ட ஊரடங்குகள் இருந்த 2021-22 காலக்கட்டத்தில் ஆணுறை விற்பனை கடந்தாண்டை விட 2 கோடி அதிகரித்து 33.70 கோடி விற்பனையாகியுள்ளன. அதேபோல், 2021-22 காலக்கட்டத்தில் 76.5 லட்சம் கருத்தடை மாத்திரைகள் விற்பனையாகியுள்ளன. ஊரடங்கு காலத்தில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கருத்தடை சாதனங்கள் அதிகளவில் விற்பனை ஆகியுள்ளது.

அதேவேளை, 2021-22 காலக்கட்டத்தில் Sterilisation முறையிலான கருத்தடை சிகிச்சை 25 சதவீதம் குறைந்துள்ளது. 34.57 லட்சம் என்ற எண்ணிகையில் இருந்த கருத்தடை சிகிச்சை 9.35 லட்சமாக குறைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் கோவிட் ஊரடங்கு காலக்கட்டத்தில் கருத்தடை அறுவை சிகிச்சையை விட ஆணுறை, மாத்திரை போன்ற கருத்தடை சாதனங்களையே மக்கள் நாடியுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

First published:

Tags: Condom, Contraceptive, Contraceptive Pills, Lockdown