மக்களவையில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல்..

மக்களவை கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல்..
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 1:28 PM IST
  • Share this:
கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக மக்களவை மட்டும் காலையில் கூடியது.

எம்பிக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகை தந்திருந்தனர். நாடாளுமன்ற நுழைவு வாயிலில் எம்பிக்களின் உடல்வெப்ப நிலை பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் 9 மணியளவில் அவை கூடியதும் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.


பின்னர் அவை கூடியதும், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் பொன்னானது. ஆனால், கேள்வி நேரத்தை தவிர்த்து விட்டு அவை நடவடிக்கையை மட்டும் தொடர்வதாகவும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முயற்சிப்பதாகவும் கடுமையாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.Also read: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்: நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கம்

அப்போது பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அனைத்து கட்சி தலைவர்களும் கேள்வி நேரத்தை 30 நிமிடங்கள் நடத்த ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும், இக்கட்டான சூழலில் கூட்டத் தொடரை நடத்துவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார். அரசிடம் கேள்விகள் கேட்க ஏராளமான வழிகள் இருப்பதாகக் கூறிய பிரஹலாத் ஜோசி, மத்திய அரசு விவாதத்திற்கு அஞ்சி ஓடவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு, தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் கிராமப்புற மாணவர்கள் 12 பேர் தற்கொலை செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். மாநில பாடத் திட்டத்தில் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் அடுத்த ஒரு மாதத்திற்குள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்படும் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading