Home /News /national /

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பஞ்சாயத்து செயலாளரரை தாக்கியதாக புகார் - கம்ப்யூட்டர் பாபா கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: பஞ்சாயத்து செயலாளரரை தாக்கியதாக புகார் - கம்ப்யூட்டர் பாபா கைது

கம்ப்யூட்டர் பாபா (எ) நாம்தேவ் தியாகி (54)

கம்ப்யூட்டர் பாபா (எ) நாம்தேவ் தியாகி (54)

மத்திய பிரதேசத்தில் கம்ப்யூட்டர் பாபா என அழைக்கப்படும் நாம்தேவ் தியாகி (54) போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ஆசிரமம் அமைத்துள்ள நாம்தேவ், அதில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநில அரசு ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டது. அப்போது பணியிலிருந்த பஞ்சாயத்து செயலாளரரைத் தடுத்ததாகவும், உடல் ரீதியான வன்முறையில் ஈடுபட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா அரசில் துணை அமைச்சராக பதவி வகித்த நாம்தேவ் தற்போது காங்கிரசில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Madhya pradesh

    அடுத்த செய்தி