18 வயதுக்கு உட்பட்டேருக்கான பீடியாட்ரிக் கோவேக்சின் தடுப்பூசியை சிறுவர்கர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 2, 3ஆம் கட்ட பரிசோதனை முடிந்துள்ளது. இந்த பரிசோதனையின்போது 1000 சிறுவர்கள், குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றும் செயல்திறன் உள்பட பல்வேறு தரவுகளை சேகரிக்கும் பணி நடத்தப்பட்டு, அடுத்த வாரம் இந்த தரவுகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கான கோவேக்சின் தடுப்பூசியை ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கி, தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்தநிலையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவேக்சின் தடுப்பூசியையும் இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை சிறுவர்கர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் 2, 3ஆம் கட்ட பரிசோதனை முடிந்துள்ளது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா இலா இது குறித்து கூறுகையில், பீடியாட்ரிக் கோவேக்சின் தடுப்பூசி தற்போதுதான் 2, 3ஆம் கட்ட பரிசோதனையை நடத்தி முடித்துள்ளது. இந்த பரிசோதனையின்போது 1000 குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் உள்பட பல்வேறு தரவுகளை சேகரிக்கும் பணி நடக்கிறது.
அடுத்த வாரம் இந்த தரவுகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு சமர்ப்பிப்போம் என்று தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அளவு 5½ கோடியை எட்டும் என்றும் நடப்பு செப்டம்பர் மாதத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அளவு 3½ கோடி டோஸ் எனவும் கிருஷ்ணா இலா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தடுப்பூசி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து வினியோகித்து வரும் சீரம் நிறுவனம் அடுத்த மாதம் மத்திய அரசுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் மொத்தம் 21 கோடியே 90 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்கப்போவதாக தெரிவித்தது. இது குறித்து மத்திய அரசுக்கு சீரம் நிறுவன இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
Must Read : கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தள்ளிவைக்க வேண்டும் - மா.சுப்பிரமணியன்
அந்த கடிதத்தில், தடுப்பூசி உற்பத்தி திறனை நாங்கள் அதிகரித்துள்ளோம். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை 66 கோடிக்கு மேற்பட்ட டோஸ் தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறோம். ஏற்கனவே பெற்ற ஆர்டரின்படி, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் 66 கோடி தடுப்பூசி வழங்குவோம். இத்துடன், இந்த ஆண்டு 130 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கிய பெருமையை பெறுவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.