Home /News /national /

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பெங்களூருவில் இறைச்சி விற்க தடை.. மாவட்ட நிர்வாகம் உத்தரவு

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பெங்களூருவில் இறைச்சி விற்க தடை.. மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

vinayagar Chaturthi 2022: விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பெங்களூரில் இறைச்சிக்குத் தடை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • bengalore, India
    இந்திய முழுவதும் ஆகஸ்ட் 31ம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் முழுமையாக இறைச்சி விற்க மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டத் தடை விதித்து பெங்களூரு பெருநகரக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவின் நிர்வாக அமைப்பான பெங்களூரு பெருநகரக் கழகம் (BBMP) கன்னட மொழியில் வெளியிட்ட அறிக்கையில் விநாயகர் சதுர்த்தி அன்று பெங்களூரு முழுவதும் இறைச்சிக்குத் தடை விதிப்பதாகத் தெரிவித்துள்ளது.

    அதில் இறைச்சிக்காக ஆடு கோழி போன்றவற்றை வெட்டுவதும் மற்றும் இறைச்சி விற்பதற்கும் தடை விதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த தடை பெங்களூர் பெருநகரக் கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர் பெருநகர நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை


    மேலும் கால்நடை வளர்ச்சி இணை இயக்குனர் தெரிவிக்கையில் இறைச்சி விற்பனை மற்றும் வெட்டுவதற்கான தடை விநாயகர் சதுர்த்திக்காகப் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    Also Read : ஓராண்டில் மட்டும் 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி பெருமிதம்

    இதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட நாள் அன்று பெங்களூருல் இறைச்சி விற்பனை மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Ban, Bangalore, Meat, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி