ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகனாக இருந்தாரா? வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ’ராகுல் வின்சி’ என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

news18
Updated: April 20, 2019, 8:06 PM IST
ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகனாக இருந்தாரா? வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு
ராகுல் காந்தி
news18
Updated: April 20, 2019, 8:06 PM IST
பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்துக்காக ராகுல் காந்தி அளித்த சான்றிதழில் அவர், தன்னை பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று அமேதி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் புகார் அளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

கடந்த 2004-ம் ஆண்டு அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டபோது பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.


பிரிட்டன் குடிமகன் என்ற முறையில் அவர் அந்த முதலீட்டை செய்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது சுட்டிக்காட்டி இருந்தன. மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ’ராகுல் வின்சி’ என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர், பிரிட்டன் குடிமகனான ராகுல் காந்தி நம் நாட்டு தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? என்று அந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று புகார்தாரர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு அவகாசம் அளிக்கும் வகையில் அவரது வேட்பு மனு மீதான பரிசீலனை மற்றும் விசாரணை வரும் 22-ம் தேதி நடைபெறும் என அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி ராம் மனோகர் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...