முகப்பு /செய்தி /இந்தியா / தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் தள்ளுபடி!

தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் தள்ளுபடி!

ரஞ்சன் கோகாய்

ரஞ்சன் கோகாய்

இந்த வழக்குத் தொடர்பாக புகாரளித்த பெண், இரண்டு முறை விசாரணையில் பங்கேற்றார். மூன்றாவது விசாரணையில் பங்கேற்ற அவர், இனிமேல் விசாரணையில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்துவருகிறார்.

இந்த வழக்குத் தொடர்பாக புகாரளித்த பெண், இரண்டு முறை விசாரணையில் பங்கேற்றார். மூன்றாவது விசாரணையில் பங்கேற்ற அவர், இனிமேல் விசாரணையில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

விசாரணையில், யாரும் எனக்கு ஆதரவாக செயல்படவில்லை. அனைவரும் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், ’உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see:

top videos

    First published:

    Tags: Justice Ranjan Gogai