முகப்பு /செய்தி /இந்தியா / 15 நாட்களில் மொபைல் சேவை! காஷ்மீர் பிரதிநிதிகளிடம் அமித்ஷா உறுதி

15 நாட்களில் மொபைல் சேவை! காஷ்மீர் பிரதிநிதிகளிடம் அமித்ஷா உறுதி

அமித்ஷா

அமித்ஷா

மக்களின் விருப்பத்துக்கேற்ப மாநில அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று அமித்ஷாவிடம் தெரிவித்தோம்.

  • Last Updated :

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் 15 நாட்களில் மொபைல்போன் சேவை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்ததாக காஷ்மீர் மாநில பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் பகுதியிலுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

அந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் பகுதி பிரதிநிதிகள், ‘அமித்ஷாவுடன் அமைந்த சந்திப்பு நன்றாக இருந்தது. எங்களுடைய கோரிக்கைகள் குறித்து உறுதியளித்தார். தொலைதொடர்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை 15 நாட்களில் திரும்பப் பெறப்படும் என்று உறுதியளித்தார்.

மக்களின் விருப்பத்துக்கேற்ப மாநில அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று அமித்ஷாவிடம் தெரிவித்தோம். ஊராட்சித் தலைவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் காப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஜம்மு பகுதியிலுள்ள மக்களுக்கு கூட, அவர்களது நிலத்தின் மீதான உரிமை என்னவாகும் என்ற அச்சம் உள்ளது. அதுகுறித்து அவரிடம் தெரிவித்தோம். ஆனால், அவர் முதலில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரிசெய்வதில் கவனம் செலுத்துகிறோம் என்றார்’ என்று தெரிவித்தனர்.

Also see:

top videos

    First published:

    Tags: Jammu and Kashmir