முகப்பு /செய்தி /இந்தியா / மக்களுக்கான நமது போராட்டம் தொடரும்: திரிணாமுல் காங்கிரஸ் நிறுவப்பட்ட நாளில் மம்தா உறுதி

மக்களுக்கான நமது போராட்டம் தொடரும்: திரிணாமுல் காங்கிரஸ் நிறுவப்பட்ட நாளில் மம்தா உறுதி

மம்தா பானர்ஜி. | கோப்புப் படம்

மம்தா பானர்ஜி. | கோப்புப் படம்

பத்தாண்டு கால ஆட்சியை நாம் நிறைவு செய்துள்ள நிலையில் மாநிலத்தை மேலும் சிறந்த நிலைக்கு கொண்டுசெல்ல தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பேன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திரிணமூல் காங்கிரஸ் கட்சி 1998ல் தொடங்கப்பட்டு 23ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இக்கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 34 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சியைத் தோற்கடித்து 2011ல் மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடித்தது.

இப்போது பாஜக, திரிணாமுல் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி தாங்கள் அந்த இடத்தைப் பிடிக்க கடும் முயற்சி செய்து வருகிறது, இதற்கான அரசியல் சாதுரியங்களையும் பயன்படுத்தி வருகிறது.

கட்சியின் நிறுவன நாளான இன்று மேற்குவங்க மாநிலம் முழுவதும் இதுகொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள டி.எம்.சி தலைவர்கள் கடந்த பத்து ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் குறித்து விவாதிக்க மற்றும் முன்னிலைப்படுத்தவும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் தெரு முனைக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த டி.எம்.சி தலைவர்கள் கட்சி கொடியை அதன் மாநில தலைமையகத்தில் ஏற்றி, மக்களுக்கு சேவை செய்வதில் அயராது உழைத்ததற்காக தொண்டர்களை வாழ்த்தினர்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொண்டர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:

"திரிணாமுல் இன்று 23 வயதாகும்போது, ​​ஜனவரி 1, 1998 அன்று நாம் தொடங்கிய பயணத்தை நான் திரும்பிப் பார்க்கிறேன். நமது ஆண்டுகள் பெரும் போராட்டத்தில் இருந்தன, ஆனால் இந்த காலம் முழுவதும், ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே நாம் உறுதியாக இருக்கிறோம், அது நமது மக்கள்தான். மக்களுக்கான நமது போராட்டம் தொடரும், அதற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

பத்தாண்டு கால ஆட்சியை நாம் நிறைவு செய்துள்ள நிலையில் மாநிலத்தை மேலும் சிறந்த நிலைக்கு கொண்டுசெல்ல தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பேன்.

ஒவ்வொரு நாளும் மேற்கு வங்கத்தை சிறப்பாகவும் வலுவாகவும் மாற்றுவதில் நம்முடன் தொடர்ந்து போராடும் நமது மா-மதி-மனுஷ் (தாய்-தாய்நாடு-மக்கள்) மற்றும் நமது கட்சியின் அனைத்துத் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரிணமூல் குடும்பம் இந்த தீர்மானத்தை வரவிருக்கும் காலங்களிலும் தொடரும், என்று கூறினார் மம்தா.

First published:

Tags: Mamata banerjee, West Bengal Election