ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிலிண்டர் விலை குறைப்பு

சிலிண்டர் விலை குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர்

சமையல் எரிவாயு சிலிண்டர்

14.2 கிலோ, 5 கிலோ, 10 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வணிக பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட விலை உடனடியாக நடைமுறைக்கு வந்தள்ளது.

கடந்த சில வாரங்களாக வர்த்தக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை பல மடங்கு அதிகரித்த நிலையில், தற்போது விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

இதையும் படிங்க : கே.ஜி.எஃப். 2 உடன் மோதுமா விஜய்யின் பீஸ்ட்? - இரு படங்களும் ஏப்ரலில் ரிலீஸ் 

இதையும் படிங்க : அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... சிங்கிளாக வந்து மிரட்டப் போகும் வலிமை

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர்கள் விலையை மாற்றி அமைத்து வருகின்றனர். தற்போது, இந்த வகை சிலிண்டர்களின் விலை 100 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக்குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

டெல்லியை பொருத்தளவில் 19 கிலே எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1998.50-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் 1-ம்தேதி ரூ. 100 உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர்த்து 14.2 கிலோ, 5 கிலோ, 10 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. விலைக் குறைப்புக்கு பின்னர் வர்த்தக சிலிண்டர் விலை கொல்கத்தாவில் ரூ.2,074.5 என்றும், மும்பையில் ரூ.1,951 என்றும் சென்னையில் ரூ.2,134.50 என்றளவிலும் உள்ளன.

First published:

Tags: Gas Cylinder Price