• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.266 அதிகரிப்பு- முதன்முறையாக ரூ.2,000-த்தைக் கடந்தது

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.266 அதிகரிப்பு- முதன்முறையாக ரூ.2,000-த்தைக் கடந்தது

Youtube Video

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ஒரே நாளில் 266 ரூபாய் அதிகரித்துள்ளது.

  • Share this:
    ஓட்டல்கள், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை, சென்னையில் முதன் முறையாக 2 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

    சர்வதேச கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. இதன்படி வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டரின் விலையானது, சென்னையில் நேற்று வரை 1,867.50 ரூபாயாக இருந்தது.

    இன்று ஒரே நாளில் 266 ரூபாய் அதிகரித்து 2,133 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் ஒன்றாம் தேதி இதே 19 கிலோ சிலிண்டரின் விலையானது 1,144 ரூபாயாக இருந்தது. 17 மாதங்களில் 989 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 2 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளதால் ஓட்டல்கள் நடத்துவோர் கலக்கத்தில் உள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: