ஹோம் /நியூஸ் /இந்தியா /

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடக்கம்!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம் தொடக்கம்!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து Mi-17V5 ரக ஹெலிகாப்டர் மூலம் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 12 இதர இராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர்.

  இந்த ஹெலிகாப்டர்  குன்னூர் இராணுவப்பயிற்சி கல்லூரிக்கு 10 கிமீ தொலைவில், மேல்குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் வான் வெளியில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது.

  இந்தச்சம்பவம் பற்றி அறிந்த உடனேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்கள், அவரது துணைவியார் மற்றும் 11 இதர இராணுவ அதிகாரிகள் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. விமானத்தின் குரூப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.

  தொடர்ந்து, டெல்லி விமானப்படை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள், இன்று காலை 11:00 மணிக்கு, டெல்லி காமராஜர் மார்க் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

  அப்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஜெனரல் பிபின் ராவத்தின் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் ஆகியோரின் மகள்கள் - கிருத்திகா மற்றும் தாரிணி - தங்கள் பெற்றோருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

  இதன் பின்னர் மதியம் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கியது. தொடர்ந்து, மாலை 4 மணியளவில், பிரார் சதுக்கம் இடுகாட்டில், பிபின் ராவத், அவருடைய மனைவியின் உடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also read: கையில் குழந்தை வைத்திருந்த நபர் மீது போலீசார் கடும் தாக்குதல் - குழந்தையையும் பறிக்க முயன்றதால் பரபரப்பு

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Army Chief General Bipin Rawat, Helicopter Crash