ஸ்டேன்ட் அப் காமெடியனுக்கு எதிராக வழக்குத் தொடரும் மும்பை பங்குச் சந்தை!

மும்பையிலுள்ள மும்பை பங்குச் சந்தை அடையாள கட்டிடத்தின் படத்தையும் பயன்படுத்தியிருந்தார். அந்த கட்டடத்திலும் மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என்று எழுத்துகளை பதிவிட்டிருந்தார்.

news18
Updated: April 20, 2019, 4:59 PM IST
ஸ்டேன்ட் அப் காமெடியனுக்கு எதிராக வழக்குத் தொடரும் மும்பை பங்குச் சந்தை!
மும்பையிலுள்ள மும்பை பங்குச் சந்தை அடையாள கட்டிடத்தின் படத்தையும் பயன்படுத்தியிருந்தார். அந்த கட்டடத்திலும் மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என்று எழுத்துகளை பதிவிட்டிருந்தார்.
news18
Updated: April 20, 2019, 4:59 PM IST
ஸ்டேன்ட் அப் காமெடி நடிகர் குனால் கம்ரா மீது மும்பை பங்குச் சந்தை அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தநிலையில் ஏராளமான நடிகர்கள், எழுத்தாளர்கள் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் போர்கொடி தூக்கியுள்ளனர்.

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த ஸ்டேன்ட் அப் காமெடி நடிகர் குனால் கம்ரா ’மோடிக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று வலியுறுத்தி மிகவும் பிரசித்தப் பெற்ற படங்களைப் பதிவு செய்திருந்தார்.

விஞ்ஞானிகள் வெளியிட்ட கருந்துளைப் படத்தை போட்டோஷாப் மூலம் எடிட் செய்து மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என்ற வாசகத்தை இடம் பெறச் செய்திருந்தார். அதேபோல, மும்பையிலுள்ள மும்பை பங்குச் சந்தை அடையாள கட்டிடத்தின் படத்தையும் பயன்படுத்தியிருந்தார்.

அந்த கட்டடத்திலும் மோடிக்கு வாக்களிக்காதீர்கள் என்று எழுத்துகளை பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்களை பதிவிட்ட குணால் கம்ரா, மோடியின் வாக்குறுதிகளை விட இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை’ என்று பதிவிட்டிருந்தார்.மும்பை பங்குச் சந்தை கட்டடம், ட்ரேட்மார்க் அங்கீகாரம் பெற்ற கட்டிடம் ஆகும். இதற்கு மும்பை பங்குச் சந்தை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மும்பை பங்குச் சந்தை ட்விட்டர் பதிவில், ‘பழி எண்ணம் கொண்ட அரசியல் சார்ந்த பதிவுக்கு எங்களுடைய கட்டடத்தின் படத்தை பயன்படுத்தியிருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாது. இதுகுறித்து, குனால் கம்ரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.சமூக ஆர்வலர்கள் பலர், குணால் கம்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...